in

சர்ச்சையான ஜிவி பிரகாஷ் வாழ்க்கை கோபத்தில் திவ்யா பாரதி

சர்ச்சையான ஜிவி பிரகாஷ் வாழ்க்கை கோபத்தில் திவ்யா பாரதி

 

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவியும் பள்ளி நாட்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

இவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்த இவர்கள் சென்ற வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்திற்கான முதல் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களின் பிரிவுக்கு உண்மையான காரணம் என்னவென்று அறியாத நிலையில் இவர்களின் குடும்ப பிரச்சனைக்கு காரணம் நடிகை திவ்யா பாரதிக்கும் ஜிவி பிரகாஷ்க்கும் உள்ள தொடர்புதான் காரணம் என்று விவாதிக்கப்பட்டது.

சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இந்த கருத்துக்கு நடிகை திவ்யபாரதி கோபமாக பதில் அளித்துள்ளார்.

எனக்கு சம்பந்தமில்லாத தனிப்பட்ட ஒரு குடும்ப விவாகரத்தில் எனது பெயர் தினிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்ப பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன் அதுவும் குறிப்பாக திருமணமான ஒருவருடன் நிச்சயம் டேட்டிங் செய்ய மாட்டேன் இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளிக்க தேவை இல்லை என்றாலும் இந்த விவகாரம் தற்பொழுது எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது.

ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் இனிமேல் அனுமதிக்க மாட்டேன் நான் ஒரு சுதந்திரமான பெண் எனது எல்லையை மதிக்க வேண்டும் எனவே என்னுடைய முதலும் கடைசியுமான அறிக்கை இது என்று குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

ஸ்ரீமுஷ்ணத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதாவிற்கு குழந்தை பிறந்துள்ளது..