in

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடம் பெறாததை கண்டித்து திமுக -காங். வெளிநடப்பு

புதுச்சேரி…தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடம் பெறாததை
கண்டித்து திமுக -காங். வெளிநடப்பு…

 

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு, மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் எம்பிபிஎஸ் இடங்களை அரசுக்கு பெற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளில் தனியார் கல்லூரிகள் 50 சதவீதம் இடம் தரவேண்டும். மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டும்.

இதனை புதுச்சேரியில் பின்பற்றவில்லை. கல்லூரி நிர்வாகத்தோடு ஆண்டுதோறும் அரசு பஞ்சாயத்து பேசி இடம் பெற அவசியமில்லை. அதற்கு பதிலாக மருத்துவ இடம் பெறுவதை சட்டமாகலாம். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீதம் இடம் கர்நாடக மாநிலத்திலும், 65 சதவீதம் இடம் தமிழகத்திலும் பெறுகிறார்கள் என தெரிவித்தார்.

இதற்கு சபாநாயகர் செல்வம், தேசிய மருத்துவ ஆணையம், மத்திய அசின் உத்தரவு இருந்தால் காட்டுங்கள். முதல் அமைச்சர் வந்தவுடன் கேட்டு சொல்கிறேன் என்றும் தலைமை செயலர், சுகாதார துறை செயலரை முதல் அமைச்சர் அலுவலகத்துக்கு வர உத்தரவிடுகிறேன். முதல் அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த பதிலை ஏற்காத எதிர்கட்சியினர், அரசு மீது நம்பிக்கை இல்லாததால் வெளிநடப்பு செய்கிறோம் என கூறி எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார். நாக.தியாகராஜன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ்ரமத் ஆகியோர் வெளியேறினர்.

இதனிடையே காங்கிரஸ்- திமுக வெளிநடப்பை தொடர்ந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன் மற்றும் நேரு ஆகியோர் மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெறாத அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்..

What do you think?

தென்காசியில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட கருணாநிதியின் நினைவிடம்

தனியார் மருத்துவ கல்லூரியில் 50% இடம் ஒதுக்கீடு பெறாத அரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…