கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திமுக ஆலோசனைக் கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் ஒலிக்கட்டும் பிரச்சாரம் தொடர்பான 164- நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் BLA 2 மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவர் என்.கௌதமன் தலைமையில் நடைப்பெற்றது.
ஒன்றிய அரசு போதிய நிதி வழங்காமலும் சிறப்பாக முதலமைச்சர் திட்டங்களை வகுத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். திமுக அறிவித்த திட்டத்தில் அனைத்து கட்சியினரும் ஏதோ ஒரு திட்டத்தில் கண்டிப்பாக பயன் பெற்றிருப்பார்கள் எனவே முகவர்கள் அதனை வாக்காளர்களுக்கு தெரிவித்து வாக்கு சேகரிக்கலாம்.
இந்த நிகழ்வில் கீழ்வேளூர் சட்ட மன்ற தொகுதி பார்வையாளர் கே. ஆர்.என்.போஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாகநிலை முகவர்கள் 2 செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் திமுக அரசு மக்களுக்கு செய்த சாதனைகளை கிராமம் வாரியாக கொண்டு செல்ல வேண்டும் என பேசினர்.
இக்கூட்டத்தில் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், பழனியப்பன், நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் வடவூர் ராஜேந்திரன், மாநில மீனவரணி துணை செயலாளர் மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லி, தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, பொதுக்குழு உறுப்பினர்கள் இல.பழனியப்பன், கோசி.குமார், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் கலந்துக்கொண்டனர்.