in

கலைஞரின் தாயார் நினைவிடத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் கலைஞரின் உறவினர்கள் மரியாதை செலுத்தினர்

திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 62-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் கலைஞரின் உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 62-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவினர் மற்றும் கலைஞரின் உறவினர்கள், கலைஞரின் தாயார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலைஞரின் உறவினர்கள் சோமாஸ்கந்தன், இளங்கோவன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் சேகர் கலியபெருமாள், பாலச்சந்தர், கீழ்வேளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பண்ணீர்செல்வம், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு 304 கோடி ஒதுக்கிய தமிழக முதலமைச்சர்

மூவாநல்லூர் ஊராட்சியை மன்னார்குடி நகராட்சியுடன் இணைக்க கூடாது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.