in

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.….

மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்பு…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பேட்டை மற்றும் வடசருக்கை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பாய்.பெட்சீட், துண்டு ,எழுது பொருட்கள் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை அமைப்பாளர் அருண்.விவேக் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜா சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் நாசர் தாமரைச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் துளசிஅய்யா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மருது பாண்டியன் ,அழகேசன்,தினகராஜன் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர்கள் வடக்கு தெற்கு ஒன்றிய பேரூர் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

What do you think?

பாபநாசம் ராஜகோபாலபெருமாள் கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்

திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் மாசி மக பெருவிழா சிம்ம வாகன சேவை நடைபெற்றது