புதுவை பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு,மற்றும் மின் துறை தனியார் மையம் குறித்து அமைச்சர் நமச்சிவாயத்துடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது…
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா….
புதுச்சேரியில் நான்கு கோடி ரூபாய் செலவில் மின் துறைக்கு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது இவை மின்துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்திலேயே செய்யப்பட்டுள்ளது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
அப்போது குறுக்கிட்ட மின் துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாமல் பேசுவதாக கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது குறுகிட்ட முதலமைச்சர் ரங்கசாமி மின்துறை தனியார்மயமாக்கப்படாது என்று உறுதி அளித்ததை அடுத்து சபையில் அமைதி திரும்பியது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா…
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்பட நான்கு தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இங்கு பயிலும் 830 முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு இன்று 5-ம் தேதி முதல் முதலாண்டு மருத்துவத் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வுகள் அனைத்தும் திடீரென்று ரத்து செய்து இணைப்பு கல்லூரிகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு சுற்ற்றிக்கை அனுப்பட்டுள்ள செய்தி அறிந்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு தனியார் மருத்துவ கல்லூரியின் 250 இடங்களில் 150 இடங்களுக்கு மட்டுமே புதுச்சேரி பல்கலைக்கழகம் அப்ளியேட் அளித்துள்ளது மீதமுள்ள 100 இடங்களுக்கு இன்னும் இணைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை, அதற்கு அனுமதி அளிக்க காலதாமதம் ஆவதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் மாறுபட்ட கருத்தும் உள்ளது.
மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்றார்.
இதுகுறித்து பல்கலைக்கழகத் தரப்பு உரிய விளக்கங்கள் ஏதும் இன்று வரை தருவதில் இழுபறி நீடிக்கிறது.ஆகவே, இதுகுறித்து புதுச்சேரி அரசு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றார்
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து தகவல் தனக்கு தெரியவில்லை என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி முழு விவரம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.