in

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வல்லம்படுகையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை ஆய்வுக் கூட்டம். கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடலூர் மாவட்டத்திற்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணி செயலாளரும். துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் அவர் நாளை மாலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து இன்று துணை முதல்வர் ஸ்டாலின் கார் மூலம் கடலூர் மாவட்டத்திற்கு வந்தார். அப்போது கடலூர் மாவட்ட எல்லையான சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் வல்லம்படுகை கொள்ளிடம் ஆறறின் பாலத்தின் அருகே ஒன்று திரண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது மேள, தாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் உதயநிதி ஸ்டாலினுக்கு நடனமாடியபடியே உற்சாக வரவேற்பு அளித்தனர்.

What do you think?

சிதம்பரம் அருகே பழைய விலையில் ஜேசிபி எந்திரம் வாங்கிய இளைஞர். பெயர் மாற்றம் செய்ய முடியாததால் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குத்தாலத்தில் கார்த்திகை இரண்டாவது ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம்