in

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி


Watch – YouTube Click

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி

 

பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்திய வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோரின் இல்லத்தில் தங்கி வேலை செய்தார்.

இதையடுத்து பணிப்பெண்ணை இருவரும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதோடு அவரை ஊருக்கு அனுப்பாமல் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மதிவாணன், அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதை தொடர்ந்து மதிவாணன் மற்றும் மெர்லில் ஆகிய இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் அதை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

உலக அழகி பட்டம் வேண்டாம் ஜப்பான் பெண் முடிவு

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் தான் பணக்கார குடும்பம்