போதை பொருள் மூலமாக திமுகவுக்கு வந்த செருக்கை ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும்
போதை பொருள் மூலமாக திமுகவுக்கு வந்த செருக்கை ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும் என தஞ்சையில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டு கொண்டார்.
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தஞ்சையில் வாகன பேரணி சென்றார்
தஞ்சை மூளை அனுமார் கோவிலில் இருந்து தேரடி வரை மேல ராஜ வீதியில் வாகன பேரணி சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர் தூவி வரவேற்றனர்
அதோடு மட்டுமல்லாமல் பூரண கும்ப மரியாதை செய்தனர். மக்கள் வெள்ளத்திற்கிடையில் வாகன பேரணியில் வந்த நிர்மலா சீதாராமன் தேரடியில் வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்
அப்போது பேசிய அவர்
எழுத்தாளர்கள், சங்கீதம் பாட கூடியவர்கள், இசையமைப்பாளர்கள் வாழ்ந்த மண் இந்த தஞ்சை சங்கத் தமிழை வளர்த்த மிகப் பெரிய ஒரு ஊர் தஞ்சாவூர் என்றார்.
வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போது கருப்பு நாகராஜ் என கூறிவிட்டு சாரி கருப்பு முருகானந்தம் என கூறினார்.
தமிழ்நாட்டில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும் மக்கள் மனதில் உள்ள அந்த மாறுதலை வாக்குமூலமாக செய்து காட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கச்சத்தீவு விஷயத்தை ஏன் எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள் அதில் உள்ள முக்கியமான அம்சத்தை மக்கள் பேசணும் விவாதம் செய்யணும் கட்ச தீவை மட்டும் தாரை பார்க்கவில்லை பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியையும் கூட கச்சைதீவு கொடுக்கும் பொழுது சேர்த்து கொடுத்துவிட்டதால் இன்று வரை அந்தப் பிரச்சினை தீராமல் உள்ளது.
கச்சத்தீவு மீனவர்கள் பரம்பரை அதிகாரங்கள் சுதந்திரம் அனைத்தையும் தாரை வார்த்து கொடுத்தது திமுக என குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் திமுக கட்சியை சேர்ந்த அமைச்சராக இருந்தவர் 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார்கள் அந்த குடும்பம் அந்த பணத்தை எங்கு வைப்பது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அந்த குடும்ப உறுப்பினர்கள் என அமைச்சராக இருந்த ஒருத்தர் சொன்னார்
அதைப் பற்றி கேள்வி கேட்டபோது பதிலே கொடுக்கவில்லை இன்று வரை தி.முக என சாடினார்.
சாராயம் தண்ணீர் மாதிரி கொட்டுகிறது காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.
சாராயம் மூலம் பல குடும்பங்கள் கெட்டு இருக்கிறது என்பது நமது எல்லோருக்கும் தெரியும்
குழாயை திறந்து விட்டால் தண்ணீர் எப்படி வருமோ அது போல இந்த சாராயம் கொட்டுகிறது
போதை பொருட்களை டன் டன்னாக கொட்டுகிறார்கள் இதில் ஸ்டாலின் குடும்பத்திற்கு தொடர்பு உண்டு என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது
போதை பொருட்கள் விற்ற ஆதாயத்தில் இருந்து அந்த குடும்பத்தில் உள்ள ஒருத்தரை வைத்து சினிமா தயாரித்தார்கள் என்பது நமக்குத் தெரிய வருகிறது என்றார்.
கோபாலபுரம் குடும்பத்திற்கும் போதை பொருள் விற்பனை செய்தவருக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என கூறினார்.
போதைப்பொருள் விஷயத்தில் உதயநிதி ஏன் மௌனம் காத்து வருகிறார் என கேள்வி எழுப்பினார்.
போதை பொருள் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்த செருக்கு ஓட்டு மூலமாக நொறுக்கு என முழக்கமிட்டார்.
திமுக என்றால் திராவிட முன்னேற்ற கழகம் என சொல்லுகிறோம் ஆனால் ட்ராக் முன்னேற்ற கழகம் அது விளக்கம் கொடுத்தார் நிர்மலா சீதாராமன்.