திருத்துறைப்பூண்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய திமுக சார்பில் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
தமிழக துணை முதலமைச்சரும் திமுக கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திமுக ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு நான்காயிரம் ரூபாயும் மூன்றாம் இடம்பிடித்த மாணவர்களுக்கு மூன்று ஆயிரம் ரூபாயும் வழங்கி உணவு பாக்ஸ் (ஹாட்பாக்ஸ்) பரிசாக வழங்கி மாணவர்களை பாராட்டினர்
தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 2 டேபிள் 2 நாற்காலிகள் வழங்கப்பட்டன மேலும் தூய்மை பணியாளர்களுக்கு அரசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் திமுகவினர் ஏராளமான கலந்து கொண்டனர்.