in

புதுச்சேரியில் இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள தலை முடியை வெற்றிகரமாக அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்

புதுச்சேரியில் இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள தலை முடியை வெற்றிகரமாக அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்

இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையில் குறிப்பிட்ட தக்க சாதனையை குறிக்கும் வகையில் புதுச்சேரி ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு 17 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ கிராம் தலை முடியை வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சையானது துறை சார்ந்த குழுவின் குறிப்பிடத்தக்க திறனையும் துல்லியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

இதுகுறித்து ஜெம் மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிகுமார் கூறும்போது….

நோயாளியான 17 வயது இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலி, குமட்டல், மற்றும் வாந்தியை அனுபவித்து வந்தார் ஆரம்ப கட்ட சோதனையில் வயிற்றுக்குள் ஒரு பெரிய பொருள் இருப்பதை வெளிப்படுத்தி இருந்தது என்று தெரிவித்தார்.

மேலும் முடிவான சோதனையில் ட்ரைக்கோ பெஸோர் என்ற முடி பந்து வயிற்றில் இருப்பதும் முடி உட்கொள்வதால் ஏற்படும் தீவிரமான இறப்பை குடல் அடைப்பு என்று குறிப்பிட்டார்.

நோயாளி நிலைமையின் தீவிரத்தை அறிந்து 17 வயது இளம் பெண்ணிற்கு டாக்டர் சசிகுமார் தலைமையிலான மருத்துவர் நிபுணர் குழுக்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்த அவர் இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது மேலும் உடனடியாக மீண்டு வரும் வகையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி உடல்நிலை நல்ல முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவை உட்கொள்ள தொடங்கினார் என்றார்.

நோயாளி அறுவை சிகிச்சை முடிந்து இரண்டாவது நாளிலியே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார் மேலும் இது போன்ற நோய் உள்ள நோயாளிகள் சொந்த முடியை வெளியே இழுத்து அதை உட்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தானாக ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மருத்துவ அறுவை சிகிச்சை குழுவில் இடம் பெற்ற அனைத்து மருத்துவர்களையும் ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பழனிவேலு வெகுவாக பாராட்டினார்.

What do you think?

புதுச்சேரியில் அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 24 மணி நேரத்திற்கு அகற்ற வேண்டும்

புதுச்சேரி…உறுப்பு தானத் துறையில் நவீன வசதிகள் ஏழைகளைச் சென்றடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்