யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்
அண்மையில் நடிகை நயன்தாரா தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இவரை போலவே விஜய் டிவியின் பிரபலமான அறந்தாங்கி நிஷாவை எல்லோரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பார்கள் இனி தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடி னாக அறிமுகமான இவர் தற்பொழுது விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோவில் கலக்கி வருகிறார்.
அண்மையில் இவரது கனவு இல்லத்தையும் கட்டி முடித்து இருக்கிறார். நயன்தாராவே தன்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறிய பொழுது என்னை யாரும் சின்னத்திரை நயன்தாரா என்று இனிமேல் அழைக்க வேண்டாம் அறந்தாங்கி நிஷா என்று அழைத்தாலே போதும் என்று கூறியுள்ளார்.