in

லைக் போட்டு என்கரேஜ் பண்ணாதிங்க…. ரசிதா மகாலட்சுமி

லைக் போட்டு என்கரேஜ் பண்ணாதிங்க…. ரசிதா மகாலட்சுமி

 

ரக்‌ஷிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா, ராஜ்குமார், நாகராஜ் நடிப்பில் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு.

பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதித சுதந்திரத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கோணத்தில் உருவாக்கப்பட்ட படம்.

கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடத்தில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட விசாரணையைத் தூண்டிய போலீஸ் ..இக்கு அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் கிடைக்க. கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்த்து “எக்ஸ்ட்ரீம்” படம் மூலம் இன்றைய சிக்கலான சமூகத்தில் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கி இருக்கிறது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக ரசிதா மகாலட்சுமி அருமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இப்படம் கடந்த மூன்றாம் தேதி வெளியான நிலையில் தனது அம்மாவுடன் ரசிதா மகாலட்சுமி படத்தை பார்க்க வந்த போது செய்தியாளர்கள் அவரிடம் சிலர் அரைகுறை உடையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள் அது பற்றி உங்கள் கருத்து என்னன்னு கேட்க விரைவில் பிரபலமாக வேண்டும் என்று சிலர் இவ்வாறு சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள் அதை தவறான எண்ணத்தில் பார்க்கும் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் இணையத்தில் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் அப்படியே வந்தாலும் அதுக்கு லைக் போட்டு என்கரேஜ் பண்ணாம தள்ளி விடுங்கள் ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் நாளடைவில் குறைந்து விடும்.

அண்ணா பல்கலைக்கழக சம்பவம் பற்றி கேட்டதற்கு எத்தனையோ விழிப்புணர்வை உணர்த்தும் திரைப்படங்கள் வந்தாலும் குற்றங்கள் மட்டும் குறையவில்லை என்று ஆதங்க பட்டார்.

What do you think?

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும்

தளபதி 69….இல் இணைத்த அசுர நடிகர்