in

என்னை நல்ல பெண் லிஸ்டில் சேர்க்க வேண்டாம் ..நடிகை ரேகா நாயர் அதிரடி பேட்டி


Watch – YouTube Click

என்னை நல்ல பெண் லிஸ்டில் சேர்க்க வேண்டாம் ..நடிகை ரேகா நாயர் அதிரடி பேட்டி

எதற்கும் அஞ்சாத அதிரடி நாயகி ரேகா நாயர், பிரபலமானதற்கு ரெண்டே பேர் தான் காரணம் ஒருவர் பைல்வான், இன்நோருத்தர் நம்ப பார்த்திபன் சார் தான், இவருடைய இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் மேலாடை இல்லாமல் நடித்து ரேகா நாயர் சர்ச்சையை ஏற்படுத்தினார். இவர் அண்மையில் utube சேனல் ஒன்ரில் தன்னை பற்றிய உண்மையை வெளிபடையாக பேசி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

அப்படி என்ன சொன்னார்…னா . எனக்கு எப்பொழுது முப்பத்தி எட்டு வயது ஆகிறது இந்த வயதில் இருக்கும் எனக்கு இருக்கும் தைரியத்தை என் மகள் 15 வயதிலேயே பெற்றிருக்கிறார் நான் எப்படிப்பட்ட கஷ்டத்தையும் பிரச்சனையும் எதிர்கொண்டேன் என்பது அவளுக்கு நன்றாக தெரியும் அந்த அனுபவத்தால் தான் என் மகள் இன்று தைரியமாக வளர்கிறாள் நான் எப்போதும் என் மகளிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான் என்ன நடந்தாலும் என்னிடம் தைரியமாக சொல் உனக்கு யாரைப் பிடித்திருந்தாலும் அவன் நல்லவனாக இருந்தால் நிச்சயம் அவரை உனக்கு திருமணம் செய்து வைப்பேன்

ஆனால் அவன் கெட்டவனாக இருந்தால் நிச்சயம் உடனே கட் செய்து விடுவேன் இன்று பெண்களுக்கு எல்லாம் விஷயங்களும் பிரச்சனைகளும் சவாலகம் தான் இருக்கிறது ஏனென்றால் ஒரு பெண் எதை செய்தாலும் அதை இந்த சமூகம் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது நான் சென்னைக்கு வந்த புதிதில் ஒரு நாளைக்கு ஏழு சேனலில் வேலை செய்து இருக்கிறேன் ஒரு நிகழ்ச்சிக்கு எனக்கு 300 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள் அந்த பணத்தில் நான் ஒரு வீட்டை வாடகை எடுத்து கஷ்டப்பட்டு குடும்பம் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் நான் சம்பாதிப்பதை பார்த்து வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறார்கள் நான் நல்லது பண்ணாலும் கூட அதை தவறாக தான் பார்கிறார்கள் இன்று வரை நான் வீஜே சித்ரா மரணத்திற்காக கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்கின்றேன் அவர் குடும்பத்தினர் கூட கோர்ட்டுக்கு வருவதில்லை .

அவரது மரணம் எவ்வளவு வேதனையாக இருக்கிறது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் அதை வெளியில் என்னால் சொல்ல முடியவில்லை இப்பொழுது உங்களிடம் கூறுகிறேன் அப்பொழுது நான் அமைதியாக இருந்ததால் என்னை எல்லோரும் கெட்ட பெண் என்று சொன்னார்கள் எனக்கு உங்களுடைய புகழ்ச்சியோ பூ மாலையோ அல்லது அங்கீகாரமும் எனக்கு வேண்டாம் எந்த நல்ல பெண்ணுக்கும் மெரினா பீச்சில் சிலை வைத்தது கிடையாது .என்னை நல்ல பெண் என்ற லிஸ்டில் சேர்க்க தேவை இல்லை நான் கெட்டவள் தான் என்பதை நான் பகிராமமாகவே கூறுகின்றேன் என்று ரேகா நாயர் சரவெடியாக வெடித்து தள்ளினார் கூறியுள்ளார்


Watch – YouTube Click

What do you think?

பிரபல திரைப்பட இயக்குனர் அவரது சொந்தக் கிராமத்தில் நல்லடக்கம்

சரமாரியாக சுட பட்ட பிரபல டிவி ஷோ நடிகர்