நான் இறந்த பிறகு எனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர வேண்டாம்… நடிகை மும்தாஜ் கோரிக்கை
நடிகை மும்தாஜ் டி. ராஜேந்திரன் இயக்கத்தில் மோனிஷா என் மோனலிசா என்ற முதல் படத்திலேயே கவர்ச்சி தூக்கலாக நடித்தவர், கவர்ச்சி நாயகியாகவே வலம் வந்தார்.
திடீரென்று சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலை கட்டியவர், தற்போது சினிமா துறையை விட்டு முழுவதுமாக விலகி மும்தாஜ் ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் பொழுது நான் சிறுவயதில் தெரியாமல் கவர்ச்சியாக நடித்து விட்டேன். ஆனால் இப்பொழுது என் குடும்பத்துடன் உட்கார்ந்த அந்த படத்தை பார்க்க என்னால் முடியவில்லை எனக்கே அசிங்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதுவரை மூன்று முறை மெக்கா சென்றுள்ளார். இவர் கொடுத்துள்ள பேட்டியில் என் மத புத்தகமான குர்ஆனில் சொல்லப்பட்டதை தெரிந்து கொள்ளாமல் நான் சினிமாவில் நடித்து தவறு செய்து விட்டேன்.
Auto Immune பிரச்சனையால் பெரிதும் பாதிப்பட்டதால் திருமணம் செய்யாமல் தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும் அல்லாஹ் தான் தனக்கு மறுவாழ்வு கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இவர் தற்பொழுது ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார் நான் இறந்த பிறகு எனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தயவு செய்து பகிர வேண்டாம் எனது கடைசி ஆசையாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி என் புகைப்படங்களை நீங்கள் பகிர்ந்தால் என் மரணத்திலும் வலியை கொடுக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.