in

மாநில அந்தஸ்து தர முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாஜனதாவுக்கு வாக்களிக்கக்கூடாது.


Watch – YouTube Click

மாநில அந்தஸ்து தர முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாஜனதாவுக்கு வாக்களிக்கக்கூடாது. சாதாரண ரேஷன் கடையை திறக்காத, இவர்களா மாநில அந்தஸ்து பெறமுடியும் என்ற கேள்வி எழுகிறது என்று புதுச்சேரி மாநில‌ திமுக அமைப்பாளர் சிவா கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி பொதுகூட்டத்தில் எதிர்க் கட்சித்தலைவரும், திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், சிறிய மாநிலமான புதுவையில் அத்துமீறி ஜனநாயக படுகொலைகள் நடந்தன. டெபாசிட் வாங்காத கட்சி, காங்கிரசில் இருந்தோரை அழைத்து சென்று ஆட்சி அமைக்கின்றனர். ஜனநாயக படுகொலையை அச்சமில்லாமல் செய்வோர் பாஜனதாதான். கடந்த 10 ஆண்டு காலமாக பாஜனதா கூட்டணியில்தான் முதல் அமைச்சர் ரங்கசாமி இருக்கிறார். முதல் கோரிக்கையாக மாநில அந்தஸ்து என்று கூறுவார். என்.ஆர்.காங்கிரஸை ஆரம்பித்தது ஏன் என்று அனைவருக்கும் தெரியும். மக்களால் தேர்வு செய்யப்பட்டோர் ஆளும் மாநில அரசு அமைய மாநில அந்தஸ்து தேவை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து தருவோம் என்று தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும், தேர்தல் அறிக்கையிலும் சொல்லியுள்ளனர். இருவரும் சொன்னால் செய்பவர்கள். மக்களை நேசிக்கும் ஆட்சி மத்தியில் வரவேண்டும். தமிழக புதுச்சேரி மக்களையும் நேசிப்பவர் ராகுல் என்பது அவர் ஸ்டாலினுக்கு வாங்கி வந்த இனிப்பே சாட்சி. புதுச்சேரி பிரச்சினைகள் மக்களுக்கு தெரியும். தேர்தலில் கணக்கை தீர்க்க காத்துள்ளனர். அரசிடம் மக்கள் கேட்க நினைத்ததை எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளனர்.

மாநில அந்தஸ்து தர முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாஜனதாவுக்கு வாக்களிக்கக்கூடாது. சாதாரண ரேஷன் கடையை திறக்காத, இவர்களா மாநில அந்தஸ்து பெறமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் காப்பீட்டு அட்டை உள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும்.ஆயுஷ்மான் கார்டு வைத்திருந்தால் சிகிச்சை பெற முடியும் என்று அறிவித்தனர். இந்த அட்டையை யாராவது பயன்படுத்தி பலன் பெற்றார்களா.? என்றால் இல்லை. இதில் மோசடி நடக்கிறது.

சுயகவுரவம், தன்மானத்துக்கு சவால் விடுவோரை வீட்டுக்கு அனுப்புங்கள். தேர்தலுக்கு பணத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பணத்தால் மக்களை ஏமாற்ற முடியாது. தோல்வியை சந்திக்காத வைத்திலிங்கம் மத்திய அமைச்சராவது உறுதி என்றார்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லையில் காவல்துறையினர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர்

மோடி ஆட்சியை விமர்சித்து பக்கோடா மற்றும் அல்வா வழங்கி பிரச்சாரம்