முதல்முறையாக புதுமையான அனிமேஷனில் டபுள் டக்கர்
டபுள் டக்கர் படத்தை புதுமையான அனிமேஷனில் இயக்கிய மீரா மகதி கூறியதாவது …
இந்தியாவிலேயே முதல்முறையாக பிரமிக்கும் வகையில் அனிமேஷன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது டபுள் டக்கர் படம். குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் தான் இப்படத்தை நான் இயக்கி இருக்கிறேன்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் டபுள் டக்கர் படம் இயக்கி இருக்கிறேன் . வளர்ந்துவரும் சில நடிகர்களிடம் கதை சொல்ல முயன்றேன். யாரும் குறைந்த பட்சமரியாதையைக் கூட கொடுக்கவில்லை.
5 நிமிடம் மட்டும் கொடுங்கள் கதை சொல்ல என்றேன் அதற்கும் முன்வரவில்லை. பிறகு மைம் கோபி சார் தான் தீரஜிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் 5 நிமிடத்தில் என்னை இம்ப்ரஸ் செய்ய முடியுமா? என்று கேட்டார். இப்ப படத்தின் கதையை கேட்ட தீரஜ், உடனடியாக சிறிய படமாக இருந்தாலும் ஓகே என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் முக்கிய அம்சமே அனிமேஷன் காட்சிகள் தான் இந்த படத்தின் அனிமேஷன் பகுதிகளை சிறிய அளவில் தான் நான் யோசித்து வைத்திருந்தேன் ஆனால் ஏர் ஃபிளக்ஸ் நிறுவனம் இது சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் என்று கூறி பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்தி விட்டனர்.
ஆழமான ஒரு கருத்தை இப்படம் சொல்லவிருக்கிறது ரைட் லெப்ட் என்ற இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் தீரஜ் செய்யும் கலாட்டா தான் டபுள் டக்கர் படம் கோவை சரளாவின் நகைச்சுவை தான் இந்த படத்திற்கு பெரும்பலமே. வித்யாசாகர் இசை அமைத்திருக்கிறார் .
தீரஜ்...உடன் சுமதி வெங்கட், கோவை சரளா , எம் எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ராஜேந்திரன் ஒளிப்பதிவில் மேஜிக்கல் செய்திருக்கிறார் .. சினிமா உலகில் இன்னொரு பரிமாணம் இப்படம் என்று எதிர்பார்க்கிறோம்.
படத்தின் டிரைலர் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து நிச்சயம் படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறோம் கோடை காலத்தில் குழந்தைகளின் கனவுகளை உயிர்ப்பிக்கும் விதமாக ஆக டபுள் டக்கர் இருக்கும் .ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம் .