in

காவல்துறையினருக்கு சன்கிளாஸ்களை வழங்கிய டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை


Watch – YouTube Click

காவல்துறையினருக்கு சன்கிளாஸ்களை வழங்கிய டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை

 

வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன்கிளாஸ்களை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வழங்கியது

சமூகத்தின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த பாடுபடும் போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்கான ஒரு நடவடிக்கை

திருவண்ணாமலை, மே 14, 2024: போக்குவரத்துத் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் சட்டம் & ஒழுங்குத் துறை ஆகியவை அவுட்ரீச் திட்டத்தின் ஒரு பகுதியாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையிடமிருந்து 250 சன்கிளாஸ்களைப் பெற்றன.

இந்த கோடையில் தொடர்ச்சியான சூரிய வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போக்குவரத்து போலீசாருக்கு மருத்துவமனையானது சன்கிளாஸ்களை வழங்கியது.

திருவண்ணாமலையிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் ஐசக் ஆபிரகாம் ராய் தனது கருத்தைத் தெரிவிக்கும் போது, “கண்கள் நம் உடலின் மிக உணர்திறன் வாய்ந்த உணர்ச்சி உறுப்பு ஆகும். இவை நமது தோலைப் போலவே சூரிய ஒளிக்கதிர்களினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு சூரியனின் புற ஊதாக் கதிர்களை பார்ப்பது கேட்டராக்ட், மாகுலார் டிஜெனரேஷன் மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. நாள் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் வெளியிடங்களில் இருப்பதால் சூரியனில் இருந்து வரும் ஒளியானது கண் அழற்சி மற்றும் தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும்.

நல்ல சன்கிளாஸ்கள் நம் கண்களுக்கு புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் சேதத்தின் தாக்கத்தை குறைக்கிறது. கண் கூச்சத்தைத் தடுக்கிறது மற்றும் கண்களைச் சுற்றியுள்ள உணர்திறன் பகுதிகளைப் பாதுகாக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் பாதுகாக்க உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து பாடுபடுவதால், அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எங்களது இந்த நடவடிக்கையானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.”

திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஐபிஎஸ் மருத்துவமனை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிப் பேசுகையில், “உள்ளூர் அதிகாரிகளை ஆதரிப்பதில் மருத்துவமனையின் உறுதிப்பாட்டைக் காணும்போது இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு ஃபேஷன் என்பதைத் தவிர, சிறந்த சன்கிளாஸ்களைத் தேர்ந்தெடுப்பதால் அவை கடுமையான சூரியக் கதிர்களில் இருந்து நமது கண்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது. நமது போக்குவரத்து காவல்துறையினருக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பவர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு படி மேலே சென்று டாக்டர் அகர்வால் மேற்கொண்ட இந்த கவனிக்கத்தக்க நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.”


Watch – YouTube Click

What do you think?

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்