in

திருவண்ணாமலை மாவட்டத்தில் 28-வது காவல் கண்காணிப்பாளராக டாக்டர் எம்.சுதாகர் பொறுப்பேற்றுக்கொணடார்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் 28-வது காவல் கண்காணிப்பாளராக டாக்டர் எம்.சுதாகர் பொறுப்பேற்றுக்கொணடார்…

தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த முனைவர் கே.பிரபாகர் தாம்பரம் குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையர் ஆக பதவி வகித்து வந்த டாக்டர் எம்.பிரபாகர் திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக காவல்துறையினரின் அலங்கார அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்ட அவருக்கு சக காவல்துறை அலுவலர்கள் ஊழியர்கள் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.

சட்டத்திற்கு புறம்பான போதைப்பொருட்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடக்கப்படும் எனவும் எந்தவிதமான போதை பொருட்களையும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் இல்லாத வகையில் காவல் பணி மற்றும் செயல்பாடுகள் இருக்கும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அதேபோல சுற்றுலா பயணிகள் அவர்களுக்கு காவல்துறை சார்பாக என்ன மாதிரியான ஒரு வசதிகள் மேற்கொள்ள வேண்டுமோ அதை அனைத்தும் மேற்கொள்ளப்படும்,இந்த நகர பகுதியில் சரி மாவட்டத்தோட இதர பகுதிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்து காவல் பணி மேற்கொள்ளப்படும், குற்றவாளிகள் மற்றும் பழைய குற்றவாளிகள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் எந்தவிதமான குற்றச்சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல் பணி நேர்மையாகவும், சீராகவும் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 09-10-2024

கொடைக்கானல் மேல் மலை பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பேட்டி