டாக்டர் ராமதாஸ் வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம்
சட்டமன்ற தொகுதியில் மதுராந்தகம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை,அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்பு உரை கூட்டத்தில்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியது:
தமிழகத்தில் 10 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சி மூன்று பேர் பெண்கள் வேட்பாளர்கள்
அதிகமான வாக்காளர்கள் பெண்கள் உள்ளனர் பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் சாதிக்க பிறந்தவர்கள் பெண்கள்.பெண்களை தெய்வமாக வணங்குகிறோம்.
சமூக நீதி என்பது திமுகவிற்கு தெரியாது.சமூக நீதிக்காக போராடி வருகின்ற ஒரு கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.
காங்கிரசுடன் 20 ஆண்டுகால கூட்டணியில் இருந்தவர்கள் திமுக
அந்த காலத்திலே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என வசனங்களை தான் நான் கேட்டோமே தவிர உருப்படியாக தி.மு.க வினர் எதையும் அங்கே போராடி வாயாடி பெறவில்லை. உலக அளவில் பேசப்படும் ஒரே பிரதமர் நரேந்திர மோடி,400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார்.ஆகவே,வெற்றுக் கூட்டணியில் உள்ள பாமகவின் சின்னமான மாம்பழச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் பேசினார்.