in

விமான நிலையத்தில் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வட மாநில ஊழியர்களிடம் ஓட்டுநர்கள் வாக்குவாதம்


Watch – YouTube Click

மதுரை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல வரும் தனியார் கார்களுக்கு 3 நிமிடத்திற்கு 135 ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வட மாநில ஊழியர்களிடம் ஓட்டுநர்கள் வாக்குவாதம்..

மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் ஒப்பந்ததாரர் முடிவடைந்து புதிதாக  1ஆம் தேதி முதல் ஆஞ்சநேயா என்ற ஏஜென்சி மூலம் விமான நிலைய நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதல் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் புதிதாக மாற்றப்பட்டுள்ளது அதன்படி வாகன பார்க்கிங் கட்டணம் ரூ 20 (0முதல் 30 நிமிடங்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக கார்களுக்கு 30 முதல் 120 நிமிடங்கள் என்றால் ரூ35, தனியார் கார்களுக்கு ரூ30 மற்றும் ரூ40, டெம்போ (ஏழு இருக்கைகளுக்கு மேல், ரூ60 மற்றும் ரூ80), பஸ், டிரக் (ரூ170 மற்றும் ரூ250) மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கு ருபாய் 10 மற்றும் 30 முதல் 120 நிமிடங்கள் என்றால் ரூ15 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கார்கள், கோச், பஸ், டிரக் மற்றும் மினி பஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய 2 நிமிடம் 30 வினாடிகளுக்கு மேல் உள்ள வணிக ரீதியான வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களுக்கு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹10 என கட்டணம் அதிகரிக்கும்.

வெளி மாவட்ட, மாநில, நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனைத்து செல்வதற்காக வரும் தனியார் கார்களுக்கு 3 நிமிடத்திற்கு 135 என கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பயணிகளை ஏற்றுவதற்காக வந்த தனியார் கார் பயணிகளை ஏற்றிவிட்டு மூன்று நிமிடத்தில் வந்துள்ளது அதற்கும் 135 ரூபாய் நிர்ணய கட்டணமாக செலுத்த வேண்டும் என வடமொழிந்த ஊழியர்கள் தெரிவித்ததால் வாக்குவாதம் கார் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதேபோல் தொடர்ச்சியாக 5 நிமிடத்திற்குள் பயணிகளை ஏற்றி வந்த மற்றொரு தனியார் வாகனமும் 135 அதிகமான கட்டணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகளை ஏற்றி செல்வதற்காக வரும் வாகனங்கள் பழனி விமானத்திலிருந்து வெளியே வந்த பிறகு தான் அழைப்பதாகவும் அதற்கு பிறகு தான் மதுரை விமான நிலையத்திற்கு உள்ளே நுழைந்து பயணிகள் மற்றும் அவரது உடல்நிலை ஏற்றிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்தாலும் 135 ரூபாய் கட்டணம் வசூல் செய்வது ஏற்புடையதல்ல என வாகன ஒட்டிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

வாகனங்கள் உள்ளே சென்று வரும் நேர அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீனாட்சியம்மன் கோவிலில் பேட்டி