in

கனமழையால் பயிரிடப்பட்ட வெற்றிலைக் கொடிகள் முழுவதும் சாய்ந்து சேதம்

கனமழையால் பயிரிடப்பட்ட வெற்றிலைக் கொடிகள் முழுவதும் சாய்ந்து சேதம்

 

திருவையாறு அருகே கருப்பூர் பகுதிகளில் தொடர் கனமழையால் பயிரிடப்பட்ட வெற்றிலைக் கொடிகள் முழுவதும் சாய்ந்து சேதம்….

விவசாயிகள் வேதனை .. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை…..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா கருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலைக் கொடிக்கால் பயிர் செய்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையினால் கருப்பூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலைக் கொடிக்கால் முழுவதும் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்காலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என வெற்றிலை சாகுபடி செய்த விவசாயின் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் தமிழக அரசின் வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

1000-திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வாய்க்காலில் உடைப்பு

கும்பகோணத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா