in

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி

 

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தஞ்சை மாவட்ட எஸ்பி ராஜாராம் தொடங்கி வைத்தனர்.

மதுவிலக்கு மற்றும் ஆயித்தீர்வை துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தஞ்சை மாவட்ட எஸ் பி ராஜாராம் இன்று தொடங்கி வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு, போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிரமங்களின்றி புகார் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டன.

What do you think?

தனது உடலை தானம் செய்த ஷிஹான் ஹுசைனி

மகராஜா வெற்றி ஆகாச வீரனுக்கு கைகொடுத்ததா?