in

புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது


Watch – YouTube Click

புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது

 

போலீசாரின் தொடர் நடவடிக்கைகளால் புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது- டிஜிபி ஸ்ரீனிவாஸ் பேட்டி

போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி இருந்தால் அதிலிருந்து வெளியேறி வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்றும் அறிவுறுத்தல்

புதுச்சேரி பாண்டி மெரினாவில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் போலீஸார் பீச் வாலிபால் போட்டியை இளையோருக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி பாண்டி மெரினா கடற்கரையில் தொடங்கிய பீச் வாலிபால் போட்டியை டிஜிபி ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர்…..

போதைப்பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை இளையோருக்கு ஏற்படுத்த சில நாட்களுக்கு முன்பு கேரம் போட்டிகள், மோட்டார் சைக்கிள் பேரணி, வாக்கத்தான் என பலவித போட்டிகளை நடத்தி வருகிறோம்.

இது இளையோரையும், போலீஸாரையும் நெருக்கமாக செயல்பட உதவும். போதைப்பொருள்களை தவிர்த்து, ஆரோக்கியமான சமூகம் அமையவும், எதிர்காலம் சிறப்பாக அமைய இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர் போதைப்பொருள்களில் இருந்து விலகி இருக்கவும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி போதையை தவிர்த்து ஆரோக்கிய வாழ்வை இளையோர் வாழ வேண்டும் என்பதை இந்நிகழ்வுக்கான இலக்காகும்.

போதைப்பொருட்களை பிடிக்க குழுக்கள் அமைத்து நடவடிக்கை தொடர்ந்து எடுக்கிறோம். தற்போது போதை பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது. இது தொடரும். முற்றிலும் போதைப்பொருள்கள் விற்பனை நீங்கும் வரை சோதனை நடவடிக்கைகள் தொடரும்.

கஞ்சா, போதைப்பொருள் விற்போரை பிடித்து கைது நடவடிக்கைக்கு பிறகு நீதிமன்றம் தண்டனை தரும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பிரச்சினை போலீஸாருடையது மட்டுமல்ல. சமூகத்துக்கும் இதில் பொறுப்புண்டு. தம் குழந்தைகள் செயல்பாடுகளை பெற்றோர்கள், கல்லூரிகளில் பேராசிரியர்கள் கவனிக்க வேண்டும்.

சமூகத்துக்கும் விழிப்புணர்வு தேவை. தற்போது மக்கள் இந்நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறார்கள், போதைக்கு இளைஞர்கள் அடிமையாக இருந்தால் அதிலிருந்து வெளியேறி வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்றுதான் இப்போட்டிகளை நடத்துகிறோம் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

அனுமதியை ரத்து செய்ய வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி பேட்டி

திருவிழாவில் பட்டாசு வெடிப்பது போன்று புதுச்சேரியில் வெடித்த டிரான்ஸ்பார்மர்