in

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள்

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் மெத்த பெட்டமைன் என்பது உறுதியானது .

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் கடந்த 1ம் தேதி இரண்டு பிளாஸ்டிக் டப்பாக்கள் கரை ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து வந்து கடற்கரையில் ஒதுங்கி கிடந்த 2 கிலோ எடை கொண்ட இரண்டு பிளாஸ்டிக் டப்பாக்களை கைப்பற்றினர்.

பின்பு சென்னையில் உள்ள ஆய்வகத்தில் இந்த போதைப் பொருளை சோதனை செய்ததில் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் என்பது உறுதியானது.
இதன் சர்வதேச சந்தையின் மதிப்பு 3 கோடி ரூபாய் எனவும், இந்த போதைப் பொருளை கடற்கரையில் கரை ஒதுங்கியது எப்படி? யார் கடத்தியது ? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கூறியுள்ளார்

What do you think?

நடுக்கடலில் அதிபத்த நாயானார் சிவனுக்கு தங்கமீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் வித்தியாசமான திருவிழா

தமிழ்நாட்டில் தான் அதிக வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் பெற்று வருவதாக ஆலம்பூண்டியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு.