பள்ளி அருகே உள்ள கடைகளில் டிஎஸ்பி திடீர் ஆய்வு
ஹான்ஸ், குட்கா பான், மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டும் டிஎஸ்பி
தமிழக அரசு சார்பில் ஹான்ஸ் குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை விற்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும் இந்நிலையில் போளூரில் பள்ளி அருகில் செயல்படும் பெட்டி கடை, டீ கடை உள்ளிட்ட கடைகளில் ஹான்ஸ், குட்கா பான், மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மாட்டுப்பட்டி தெரு, காந்தி ரோடு, டைவர்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை உள்ளிட்ட கடைகளில் போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடைகளில் உள்ள பல்வேறு பொருட்களை சோதனை செய்து ஆய்வு செய்தனர்.
மேலும் ஹான்ஸ், குட்கா, பான் மசாலா, உள்ளிட்ட போதை பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம் எனவும் அவ்வாறு மீறினால் சிறை செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார் உடன் காவல் உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, காவலர்கள் சரவணன், மணிமாறன், உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.