in

பாபநாசம் தாலுகா பகுதிகளில் தொடர் மழையால் வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து சேதம்..

பாபநாசம் தாலுகா பகுதிகளில் தொடர் மழையால் வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து சேதம்..

விவசாயிகள் வேதனை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை, இராஜகிரி, வன்னியடி, இளங்கார்குடி, வழுத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை கொடிக்கால் பயிர் செய்துள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையினால், பண்டாரவாடை பகுதியில் அமைந்துள்ள வெற்றிலை கொடிக்கால் முழுவதும் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்காலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என வெற்றிலை சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசின் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

What do you think?

கும்பகோணம் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசுவதற்குள் சர்ச்சை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 63 நாயன்மார்களின் சிறிய ரகத் தேர்தல் பழுது பார்த்து வர்ணம் தீட்டும் பணி