மயிலாடுதுறையில் உட்கட்சி மோதல் காரணமாக திமுக பிரமுகர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், உனக்கு தேதி குறித்து ஆகிவிட்டது ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமான சம்பவம் நடக்கும் என வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் இல் மூன்றாவது முறையாக கொலை மிரட்டல், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பூர்வீகமாக கொண்டவர் அகமது ஷா வலியுல்லாஹ். வெளிநாட்டில் தொழிலதிபராக உள்ள இவர் மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை செயலாளராக உள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட்டு கேட்டிருந்தார்.
இதன் காரணமாக தண்ணீர் பந்தல் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து குறுகிய காலத்தில் அக்கட்சியில் முக்கியமானவராக வலம் வந்தார் இது உள்ளூர் திமுகவினர் இடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்தில் மூன்று முறை கொலை மிரட்டல் விடுத்து whatsapp மூலம் வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது.
கடைசியாக வந்த மெசேஜில் உனது அலுவலகத்தில் 17ஆம் தேதி பெட்ரோல் குண்டு வெடிக்கப் போவதாகவும் அதற்குப் பிறகும் ஏரியாவில் அரசியல் செய்ய வந்தால் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமான சம்பவம் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது இது குறித்து அகமதுஷா வலியுல்லாஹ் தரப்பினர் மயிலாடுதுறை போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர் அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அகமதுஷா வலியுல்லாஹ் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.