in

பெஞ்சல் புயல் நிவாரண நிதி வழங்காததால் செஞ்சி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல்

பெஞ்சல் புயல் நிவாரண நிதி வழங்காததால் செஞ்சி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல்

 

பெஞ்சல் புயல் நிவாரண நிதி வழங்காததால் செஞ்சி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாண்டிச்சேரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம், மற்றும் நங்கிலிகொண்டான் பகுதி மக்கள் கிருஷ்ணகிரி பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்காகளில் மேல்மலையனூர் தாலுகா சொக்கனந்தல்,தென்பாளை கிராமம் மற்றும் செஞ்சி தாலுகாவில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக வல்லம் அருகே உள்ள சேர்விளாகம் பஞ்சாயத்து உட்பட்ட வடவானூர், நங்கிலிகொண்டான் , காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் காந்திநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

மற்ற மூன்று பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண நிதி வழங்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்து வருகின்றனர். செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் பகுதியிலும் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்த நிலையில் செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் பகுதியிலும் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.இதனால் திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன …

பொதுமக்களின் சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது …
திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷிநிகம், செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை செஞ்சி துணை கண்காணிப்பாளர் கார்த்திகபிரியா, பொதுமக்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

சூப்பர் ஸ்டாரின் தளபதி re..release

மீண்டுமா? கோபத்துடன் ஏ ஆர் ரகுமான் மகள்