in

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அரிப்பு காரணமாக படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் அவதி

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அரிப்பு காரணமாக படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் அவதி

 

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் பூம்புகார் மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறங்குதளத்தில் அடிப்பகுதியில் கடும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக படகுகள் கட்டும் இடத்தில் படகுகளை கட்ட முடியாமல் மீனவர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். துறைமுகத்தில் ஓரத்தில் நங்கூரம் இட்டு படகுகளை நிறுத்தி உள்ளனர். தற்பொழுது பூம்புகார் துறைமுக பகுதியில் 50 கிலோ மீட்டர் வரை காற்று வேகத்துடன் வீசி வருகிறது.

இதனால் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதுகிறது காற்றின் வேகம் அதிகரித்தால் படகுகள் சேதமடைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் 300 மீட்டர் தொலைவிற்கு கருங்கல் தடுப்பு சுவர் கட்டி மீன் இறங்கு தளத்தை சரி செய்வதற்கு 117 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு நிதியை ஒதுக்காத காரணத்தால் துறைமுகத்தை பயன்படுத்த முடியாமல் மீனவர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

What do you think?

சீர்காழி அருகே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் விரிசல்

கார்த்திகை மாத சித்தரை நட்சத்திரத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு கூட்டு வழிபாடு