குற்றால அருவிகளில் வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் வரத்து குறைவு
குற்றால அருவிகளில் வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் வரத்து குறைந்த நிலையிலும் மெயின் அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் கணிசமாக காணப்பட்டது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை குறைந்ததன் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது.
மேலும் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையிலும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு துவங்காத நிலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக கொட்டி வருகிறது.
இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் குறைவாக கொட்டும் தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் காலை முதலே உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குற்றாலத்தில் ஓரிரு வாரங்களில் சீசன் துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.