தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விற்பனை
ஒட்டன்சத்திரத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது விவசாயிகள் வேதனை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தக்காளிக்கு என பிரத்தியேகமான காய்கறி சந்தை அமைக்கப்பட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
எடுப்புக் கூலிக்கு கூட கட்டுபடியாகத நிலையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 14 கிலோ அடங்கிய ஒரு தக்காளிப்பட்டியின் விலை 60 முதல் 100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ தக்காளியின் விலை ரூ.6 முதல் 10 என மொத்த விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரிகள் வாங்கி சென்று 1 கிலோ ரூ.10 முதல் 15 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக இந்த வருடம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை மிகவும் குறைவாக காணப்பட்டு வருவதாக ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.