in

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் காத்துக் கிடக்கும் அவலம்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் காத்துக் கிடக்கும் அவலம்

 

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், புறநோயாளிகள் பிரிவில் 2 மணி நேரமாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் காத்துக் கிடக்கும் அவலம், நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நபரை அலைக்கழித்த கொடுமை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது.

இதன் காரணமாக நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இன்று காலை 8:30 மணி வரை புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகிய இரண்டு இடங்களிலும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வரிசையில் காத்துக் கிடந்தனர்.

40 மருத்துவர்கள் பணி செய்ய வேண்டிய மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் 24 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் இரவு நேர பணி முடிந்து காலை பணிக்கு வர வேண்டிய மருத்துவர்கள் தாமதமாக வரும் சூழ்நிலை நிலவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 7:00 மணி முதல் புறநோயாளிகள் பிரிவில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் குறிப்பாக வயதானவர்கள் காத்துக் கிடந்தனர்.

அவர்கள் நிற்க முடியாமல் பல்வேறு இடங்களில் அமர்ந்தும் சுவற்றில் சாய்ந்தும் பரிதாபமாக நின்று கொண்டிருந்தனர். இதில் உச்சபட்ச கொடுமையாக நெஞ்சுவலி ஏற்பட்ட ஒருவர் புறநோயாளிகள் பிரிவிற்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் இல்லை என்பதற்காக அவசர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைத்தனர். அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்த நபரை மருத்துவ உதவியாளர்கள் மீண்டும் புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ உதவியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒன்பது மணிக்கு இரண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கான நபர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்ததால் நாங்கள் தனியார் மருத்துவமனைக்காவது சென்றிருப்போம் ஆனால் கையில் காசு இல்லை என்று மூதாட்டி ஒருவர் புலம்பியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

What do you think?

கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கம் சார்பில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி

கீழநாஞ்சில்நாடு ஸ்ரீ ராஜ விநாயகர் ஆலயம் ராஜ கணபதி மூஞ்சூறு வாகனத்தில் வீதி உலா