in

காரணமாக 50 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

காரணமாக 50 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

 

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக 50 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக 50க்கும் மேற்பட்ட ஏக்கரில்அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வருவாய்த் துறையினர் நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் முதல் போக சாகுபடி நெல் நடவு செய்து தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் மழைநீர் சென்றதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது வருவாய்த்துறை அதிகாரிகள் நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் சென்ற ஆண்டும் இதே போல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் சேதம் அடைந்து மிகவும் சிரமத்தில் இருந்து தற்போது வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து நெல் நடவு செய்திருந்தோம் இந்த ஆண்டும் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து நஷ்டம் அடைந்துள்ளது.

இந்த ஆண்டாவது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் இதேபோல் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

What do you think?

கரியாபட்டிணம் சந்தன மாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம்

மனித வள அதிகாரிகள் சங்கத்தின் 8ம் ஆண்டு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது