in

திருச்சி லோக்சபா தொகுதியில் துரை வைகோ வெற்றி


Watch – YouTube Click

திருச்சி லோக்சபா தொகுதியில் துரை வைகோ வெற்றி

திருச்சி லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ, 3,16,094 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 5,42,213 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

திருச்சி தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ, அ.தி.மு.க., வேட்பாளராக கருப்பையா, பா.ஜ., கூட்டணி சார்பில் அ.ம.மு.க., வேட்பாளராக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் உட்பட 35 பேர் போட்டியிட்டனர்.

திருச்சி, டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள்:

ஆண் வாக்காளர்: ஏழு லட்சத்து 57 ஆயிரத்து 130

பெண் வாக்காளர்: ஏழு லட்சத்து 96 ஆயிரத்து 616

மூன்றாம் பாலினம்: 239 பேர்.

ஓட்டளித்தவர்கள்:

ஆண் வாக்காளர்: ஐந்து லட்சத்து 12 ஆயிரத்து 264

பெண் வாக்காளர்: ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 844

மூன்றாம் பாலினத்தவர்: 102

ஓட்டு சதவீதம்: 67.52.

வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் ஓட்டு :

வெற்றி வேட்பாளர் துரை வைகோ– 5,42,213,

2வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு:

கருப்பையா– 2,29,119,

3வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு: ராஜேஷ்– 1,07,458,

4வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு: செந்தில் நாதன்– 1,00,747

5வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு சுயேச்சை செல்வராஜ்– 14796,

நோட்டா ஓட்டுக்கள்: 13,849


Watch – YouTube Click

What do you think?

செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார் டிடிஎப் வாசன்

தொகுதிக்கான வெற்றி சான்றிதழினை சு. வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பெற்றுக்கொண்டார்