அதிமுக ஆட்சி காலத்தில் வருமான வரித்துறை அமலாக்க துறையை வைத்து மிரட்டினார்கள்
நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் 32 தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடித்துவிட்டு 33வது தொகுதியாக நெல்லை வந்துள்ளேன் நமது இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது 100% உறுதியாகிவிட்டது மக்களாகிய நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என நீங்கள் போட போகும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு.
மோடி வெள்ளத்திற்கு வந்தாரா கொரோனாவிற்கு வந்தாரா புயலுக்கு வந்தாரா எதுக்கும் வரவில்லை நீட் தேர்வு 22 குழந்தைகள் இறந்தபோது வந்தாரா வீடியோ எடுத்து தமிழகத்தில் தங்கினாலும் பேன்சி டிரஸ் நடத்தினாலும் மக்கள் ஒரு தொகுதியில் கூட பாஜகவை ஜெயிக்க வைக்க மாட்டார்கள் அதிமுக மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது புறம் பகுதியில் ஒய் வடிவேல் மேம்பாலம் அமைக்கப்படும் திருநெல்வேலி ரயில்வே கோட்டம் தனியாக உருவாக்கப்படும் மகளிர்க்கு பரிசு தருவதாக கூறிவிட்டு 800 ரூபாயாக சிலிண்டர் விலையை ஏற்றிவிட்டு 100 ரூபாய் குறைத்துள்ளார்..
தற்போதைய முதலமைச்சர் யார் காலில் விழுந்தும் சேரக்குடியில் தவழ்ந்தும் பதவிக்கு வரவில்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதம் தாங்கி பழனிச்சாமி என முதலமைச்சர் அவருக்கு செல்ல பெயர் வைத்துள்ளார்.
தமிழகத்தின் இலவச பேருந்து திட்டத்தை பக்கத்தில் உள்ள கர்நாடக அரசு பின்பற்றத் தொடங்கியுள்ளது இதற்கு பெயர்தான் திராவிட மாநகர அரசு கன்னடா பிரதமர் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை பார்த்து மிகவும் பெருமைப்படுகிறது பாராட்டுகிறது.
10 ஆண்டு இந்தியாவை ஆண்ட மோடி தமிழகத்திற்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 6000 கொடுத்தது ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை அல்லது கெட்டது என அனைத்திற்கும் மக்களோடு விற்கும் கட்சி தான் திராவிட முன்னேற்ற கழகம் தமிழக மக்களுக்கு சுயமரியாதை மிக முக்கியம் நம்முடைய உரிமைகளை பரித்தால் சும்மா விட கூடாது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக கூறினார்கள் ஆனால் கட்டவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் வருமான வரித்துறை அமலாக்க துறையை வைத்து வழக்கு பதிவு செய்து மிரட்டினார்கள் அதே போல் எங்களை மிரட்ட முயற்சி செய்கிறார்கள் அதற்கு அஞ்ச கூடியவர்கள் நாங்கள் அல்ல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை அந்த அம்மையார் இறந்த பிறகு தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதி கொடுக்கப்பட்டது.
மொழி உரிமை கல்வி உரிமை மீட்க வேண்டும் என்றால் அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் இந்த முறை 40க்கு 40 வெற்றி பெற்று கலைஞரின் பிறந்தநாளுக்கு அவரது நினைவு இடத்தில் பரிசாக கொடுக்க வேண்டும் என பேசினார்.