in

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்


Watch – YouTube Click

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பிரபல சுற்றுலா தலமான ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வோரின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், சுற்றுலா பயணிகளின் விவரங்கள், வாகன எண், தங்குமிடம் உள்ளிட்டவற்றை அடையாளப்படுத்தி இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ-பாஸ் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், உள்நாட்டு பயணிகள், தங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி இ-பாஸ் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதே போன்று, வெளிநாட்டு பயணியர் தங்கள் மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணியருக்கோ, வணிக ரீதியாக வந்து செல்வோருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
மேலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், இ-பாஸ் விண்ணப்பிக்க தெரியாதவர்களுக்கு தாங்கள் உதவி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதற்கு மூன்று லட்சத்து 61 ஆயிரம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். இதில், 15 ஆயிரத்து 945 வாகனங்கள் அனுமதி பெற்றுள்ளன.
இ-பாஸ் நடைமுறை இன்று தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

சிவகாசியில் இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் உயிரிழந்தார்

மன மகிழ் மன்றத்திற்கு பூட்டு போட்ட காவல்துறையினர்