in

தைவானில் நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை மக்கள் பீதி


Watch – YouTube Click

தைவானில் நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை மக்கள் பீதி

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கடியில் 35 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைவான் நாட்டின் பல பகுதிகளிலும் மின் இணைப்பானது துண்டிக்கப்பட்டது. கிழக்கு நகரமான ஹூவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீதிக்கு ஓடி வந்தனர். தைப்பேவில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

25 ஆண்டுகளில் தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் 1999 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுமார் 2,400 மக்கள் உயிரிழந்தனர்.

தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு 3 மீட்டர் உயரத்துக்கு கடலில் அலைகள் எழக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சிறுத்தை நடமாட்டம் ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்க்க குவியும் கூட்டம்

S.R.K. மேல்நிலைப் பள்ளியின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி