in

தெலுங்கானா, சட்டீஸ்கர் மாநில எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் போலீஸ், நக்சலைட்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை.

தெலுங்கானா, சட்டீஸ்கர் மாநில எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் போலீஸ், நக்சலைட்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை.

மாவோயிஸ்டுகள் 10 பேர் மரணம்.பெரும் ஆயுத குவியிலை கைப்பற்றிய போலீஸ்.

மாவோயிஸ்டுகள் தரப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

தெலுங்கானா,சட்டீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ஆயுதம் தாங்கிய போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

எச்சரிக்கை அடைந்த போலீசார் மாவோயிஸ்டுகளை நோக்கி அதிநவீன ஆயுதங்கள் மூலம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் துப்பாக்கி சூட்டை எதிர்கொள்ள இயலாத மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை மாவோயிஸ் நக்சலைட்கள் மரணமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நக்சலைட்டுகள் தரப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

அந்த பகுதியில் போலீசார் நடத்திய தேர்தல் வேட்டையில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் பெரும் ஆயுத குவியலையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

What do you think?

வீதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் வீட்டுக்குள் விழுந்த கிரிக்கெட் பந்து கிரிக்கெட் பந்து விழுந்து பெண்ணுக்கு சிறு காயம் போலீசில் புகார்

திருவாரூரில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கத்தினர் தர்ணா போராட்டம்