புதுச்சேரி அதிமுக பரப்புரையின் போது வயதான பெண்கள் ஆட்டம்
அதிமுக பரப்புரையின் போது கற்பூர ஆரத்தி, பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து,வயதான பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு.
புதுச்சேரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து மாநில செயலாளர் அன்பழகன் பரப்புரை…பரப்புரையின் போது பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதில்லை என சரமாரியான கேள்வி. இரட்டை இலை வெற்றி பெற்றால் கோரிக்கை நிறைவேற்றப்படும்.தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்களுக்கு கொடுத்து தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்
புதுச்சேரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து மனவெளி தொகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சின்னத்திரை நடிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அவர்களை கற்பூர ஆரத்தியும் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.. மேளதாளங்கள் முழங்கு நடைபெற்ற பிரச்சாரத்தில் வயதான மூதாட்டிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்…
அப்பொழுது அதிமுக அன்பழகன் பேசும்பொழுது வாக்குறுதிகளை சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்பொழுது ஒரு பெண்மணி தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு பாண்டு தூக்கி படிக்க வைக்கின்றோம் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைப்பதில்லை ஆனால் அதிக அளவில் பணத்தை கொடுத்து விட்டு வேலையை வாங்கிக் கொள்கின்றனர். நாங்கள் இல்லாதபட்டவர்கள் எப்படி வேலை வாங்குவது என்று ஊரு மட்டும் இல்லை புதுச்சேரி முழுவதும் உள்ள படித்த பிள்ளைகளுக்கு வேலை கொடுங்கள் என ஆவேசமாக கேள்வியை எழுப்பினார்…
அதற்கு அன்பழகன் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை செலுத்துங்கள் நாங்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று தெரிவித்தார்.. மேலும் தனது செல்போன் நம்பரையும் பொதுமக்களிடம் கொடுத்து நான் செய்யவில்லை என்றால் தன்னை தொடர்பு கொண்டு கேளுங்கள் எனவும் கூறினார்…இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது..
அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகர் மனோஜ் குமார்…கலைஞர் ஒரு டூ பாகூர், ஸ்டாலின் ஒரு டூ பாகூர், உதயநிதி ஸ்டாலின் ஒரு டூ பாகூர் பேசிய அவர் கலைஞர் கருணாநிதி போல் பேசினார்… கடலில் எண்ணெய் தூக்கி எறிந்தாலும் கட்டுமரம் போல் மிதப்பேன் நடத்தி காண்பித்தார்….
அதிமுகவில் விவசாயி ஒருவர் முதலமைச்சராக வருவார் என்று எம்ஜிஆருக்கு அன்றே தெரிந்திருக்கிறது….என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்…
ஏன் கையில் திருந்த வேண்டும் வெளிநாட்டில்…ஒழுங்காய் பாடுபடு வயகாட்டில்…என்று பாட்டு பாடி வாக்குகளை சேகரித்தார்…