in

வாகன ஓட்டிகளை கடுப்பாக்கிய தேர்தல் பிரச்சாரம்


Watch – YouTube Click

வாகன ஓட்டிகளை கடுப்பாக்கிய தேர்தல் பிரச்சாரம்

 

கன்னிவாடி சாலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி பதினெட்டாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . பல்வேறு கட்சிகள் தற்போது தங்களது கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளில் ஈடுபடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தை ஆதரித்து ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பிரச்சாரத்தை ஈடுபட்டார்.

இந்நிலையில் கன்னிவாடியில் பகுதியில் தேர்தல் விதிகளை மீறி சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மதுரையில் இருந்து பழனி செல்லும் பேருந்துகள் பழனியில் இருந்து தேனி கம்பம் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அதே போன்று வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் என அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

திமுக அமைச்சர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் மகன்

 இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா