சுப்பிரமணியபுரம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மின்வாரிய ஊழியர்களால் பரபரப்பு
மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ் மின்வாரிய அலுவலகத்தை தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக மதுரை பெருநகர் வட்டத்தில் தொழிலாளர்களையும் மின்வாரிய பொறியாளர்களையும், பெண் பணியாளர்களையும் ஒருமையில் பேசி வரும் தெற்கு கோட்ட மின் பொறியாளர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், உதவி மதிப்பீட்டு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மின்வாரியத்திற்கு தொடர்ந்து நிதி இழப்பை ஏற்படுத்திய நஷ்டத்தை உருவாக்கும் வகையில் செயல்படும் மூன்று அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், களப்பணியாளர்களையும், தொழிற்சங்கங்களையும், தொழிற்சங்க தலைவர்களையும் உதாசீனப்படுத்தி கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் தெற்கு கோட்ட நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சுப்பிரமணியபுரம் தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தை தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் பாஸ்கர பாண்டியன் அலுவலகத்தின் முன்பு மின்வாரிய ஊழியர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.