in

மின்துறை ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மின்துறை ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

 

காரைக்காலில் மின்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும் மின் துறையை தனியார் மையமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் மின்துறை ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின் துறையில் 1000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில மின் துறையை தனியார் மையமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மின்துறை கிளை அலுவலகத்தில் 100க்கு மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் மின்துறை ஊழியர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களிடமிருந்து மின்கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

What do you think?

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகை பூஜா

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் திருக்குடமுழுக்கு பெருவிழா