in

களக்காட்டில் யானைத் தந்தம் மற்றும் பற்களை பதுக்கி வைத்து விற்பனை

களக்காட்டில் யானைத் தந்தம் மற்றும் பற்களை பதுக்கி வைத்து விற்பனை

 

நெல்லை மாவட்டம் களக்காட்டில் யானைத் தந்தம் மற்றும் பற்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற கும்பலை வனத்துறையின் கைது செய்தனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு ஒரு கும்பல் யானை தந்தம் மற்றும் பற்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய வனத்துறையினர் களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தை சேர்ந்த அழகிய நம்பி, ஜமீன் சிங்கம்பட்டி ஆறுமுகம், வள்ளியூர் நம்பிநாராயணன் மேலப்பாளையம் கார்த்திக், சிவந்திபுரம் வீனஸ் ஆர்பிட் ஆகிய ஐந்து நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்களிடம் இருந்து மூன்று தந்தங்கள் மற்றும் நான்கு யானை பற்கள் ஆகியவை இருந்ததை கண்டுபிடித்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து வேறு நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் ரகசிய விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சட்ட விரோதமாக யானை தந்தம் மற்றும் பற்களை பதுக்கிய ஐந்து பேரையும் களக்காடு வனத்துறையினர் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன் பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

What do you think?

பிரிவிற்கு இதுதான் காரணம்

மல்லி சீரியலில் இருந்து விலகி ஜீதமிழில் என்ட்ரி கொடுக்கும் பூர்ணிமா பாக்கியராஜ்