தேவகோட்டை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பிரமோட்சவ விழா யானை வாகனம்
தேவகோட்டை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பிரமோட்சவ விழாவை முன்னிட்டு யானை வாகன திருவீதி உலா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு யானை வாகன திருவிதி உலா நடைபெற்றது .
இக்கோவிலில் கடந்த 17ஆம் தேதி அன்று பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் ஆறாம் திருநாள் உற்சவர் பெருமாள் யாகனை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் முன்னதாக மூலவர் பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து உற்சவர் பெருமாளை சர்வ அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருள செய்து கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் மற்றும் ஷோடச உபச்சாரங்கள் நடைபெற்றன பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மின்னொழியில் யானை வாகனத்தில் பவனி வந்த ரங்கநாத பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.