in

பன்றிமலை பகுதியில் உணவு தேடி யானைகள் பொதுமக்கள் அச்சம்..

பன்றிமலை பகுதியில் உணவு தேடி யானைகள் பொதுமக்கள் அச்சம்..

 

பன்றிமலை பகுதியில் உணவு தேடி யானைகள் விவசாய நிலப் பகுதியிலும் குடியிருப்பு பகுதியிலும் வருவதால் பொதுமக்கள் அச்சம்..யானை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர் பன்றிமலை உள்ளிட்ட அடிவாரப் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக யானைகள் மலைகளில் உள்ள வனப்பகுதியில் இருந்து உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் மலைகளில் அடிவார பகுதிகளுக்கு வருகிறது.

வரும் யானைகள் தோட்டங்களில் தங்கியிருக்கும் விவசாயிகளை தாக்குவதும் அதேபோல் விவசாய பொருட்களையும் அழித்து செல்கிறது

கடந்த ஒரு மாத காலமாக யானைகள் அழகுமடை பன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில் வராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உணவு தேடி ஒற்றை யானை வந்துள்ளது.

இப்பகுதியில் அதிக அளவு விவசாயிகள் விவசாய நிலங்களில் தங்கி உள்ளனர் தற்போது யானை இப்பகுதியில் உணவு தேடி வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கன்னிவாடி வனச்சரக அதிகாரிகள் யானைக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை வனத்துக்குள் ஏற்பாடு செய்து யானைகளை அடர்ந்த வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

பொது மக்களின் கவனத்தை ஈர்த்த செய்தித்தாள் வடிவில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த பள்ளிவாசல் இடிக்கும் பனி தொடங்கப்பட்டது