in

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை உள்ளெடுப்பு செய்ய வேண்டும் குத்தாலம் கல்யாணம் வலியுறுத்தல்

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை உள்ளெடுப்பு செய்ய வேண்டும் குத்தாலம் கல்யாணம் வலியுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நிரவலால் மற்ற அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை உள்ளெடுப்பு செய்ய வேண்டும். துணைவேந்தரிடம் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் வலியுறுத்தல்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி சிக்கலில் சிக்கித் தவித்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணி நிரவல் அடிப்படையில் தமிழக அரசின் வேறு பல கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்களை தற்போது பணியாற்றும் அரசு கல்லூரிகளிலேயே உள்ளெடுப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான குத்தாலம் கல்யாணம் இன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை, அவரது அலுவலகத்தில் சந்தித்து இதுதொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து நிதிச்சிக்கல் காரணமாக மற்ற அரசு கல்லூரிகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் அனுப்பப்பட்ட பேராசிரியர்களை அந்தந்த கல்லூரிகளிலேயே அரசு உள்ளெடுப்பு எடுத்து பணியில் அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கெனவே துணைவேந்தரிடம் மனு அளித்தேன்.

அதை வலியுறுத்தி முதல்வர் அலுவலகத்திலும், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அமைச்சரை சந்தித்தும் மனு பேசியிருக்கிறேன். இதன் நிலை குறித்து விளக்கி உள்ளேன்.

தற்போது அவர்கள் பணிபுரியும் கல்லூரிகளிலேயே உள்ளெடுப்பு செய்வதால் ஏற்கனவே பணிபுரியும் பேராசிரியர்களுக்கு போட்டியாக இருக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை உறுதிமொழி பத்திரமாகவே அளிப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக துணைவேந்தரும் உறுதி அளித்திருக்கிறார் என கூறினார்.

What do you think?

காஞ்சிபுரம் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் ஊஞ்சல் சேவை உற்சவம்

தேவர் ஜெயந்திக்கு தேவருக்கு பாலாபிஷேகம் இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா