in

மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை

மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வரும் 27ம் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்க துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள சுரானா மற்றும் சாய்சூரியா டெவலப்பர்ஸ் பல பேரிடம் ஒரே இடத்தை காட்டி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாகவும் Approval பெறாத நிலங்களை கொடுத்து மக்களை ஏமாற்றியதாகவும் புகார்வந்த நிலையில் இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்களான நரேந்திர சுரானா மற்றும் சதீஷ் சந்திரகுப்தா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த இரண்டு நிறுவனங்களின் அலுவலகங்கலிலும் அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் மகேஷ் பாபு நடித்துள்ளார். இந்த குற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அவர் நடித்த விளம்பரத்தின் மூலம் பலரை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய தூண்டிய குற்றதிற்காகவும் விளம்பரத்தில் நடிக்க 5 கோடியே 90 லட்சம் சம்பளமாக மகேஷ்பாபு பெற்றுள்ளார்.

சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ள காரணத்திற்காக வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துரை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

What do you think?

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் சித்தரைமாத திருவோண நட்சத்திர திருக்கோடி, கருட சேவை

மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த விஷ்ணு விஷால்