in

அமரன் படக்குழு மீது பொறியியல் மாணவர் வழக்கு … ஒரு கோடி இழப்பீடு வேண்டும்


Watch – YouTube Click

அமரன் படக்குழு மீது பொறியியல் மாணவர் வழக்கு … ஒரு கோடி இழப்பீடு வேண்டும்

 

அமரன் படம் ஆரம்பிக்கும் பொழுது எழுந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. தினுசு தினுசு….ஸா பிரச்சனை வந்துகேட்டே தான் இருக்கு இப்போ புதுஸா ஒரு பிரச்சனை முளைச்சிருக்கு.

அமரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தன்னுடைய செல்போன் நம்பரை துண்டு சீட்டில் எழுதி சிவகார்த்திகேயன் மேல் சாய் பல்லவி போடுவது போல காட்சி இருக்கிறது. அந்த சீட்டில் உள்ள செல்போன் நம்பர் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த வி.வி. வாகேசன் என்ற பொறியியல் மாணவருடையது.

படத்தை பார்த்த பலரும் அவருக்கு போன் செய்து சாய் பல்லவி இடம் பேச வேண்டும் என்று நச்சரிக்க இதனால் டென்ஷன் ஆனா அவர் ஒரு கோடியே 10 லட்சம் இழப்பீடு கேட்டு இயக்குனர் மற்றும் ராஜ்கமல் நிறுவனத்தின் மேல் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த சம்பவத்திற்காக அமரன் படத்தின் தயாரிப்பாளர் வி.வி.யிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் திரைப்படத்தில் மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சியில் அவரது எண் மறைக்கப்பட்டு காட்சி மாற்றி அமைத்து தணிக்கை குழுவினரின் சான்றையும் கோர்ட்…டில் சம்பர்பித்தனர்.

மனுதார் தரப்பில் இருந்து சாய்பல்லவிடம் பேச வேண்டும் என்று ரசிகர்கள் தொடருந்து போன் செய்து மன உளைச்சலை கொடுக்கின்றனர் என்று கோரிக்கை வைத்த போது நீதிபதி மனுதாரரின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் அதற்காக இந்த வழக்கில் நிவாரணம் பெற முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளி வைத்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

திருவெண்காட்டில் இலவச பயிற்சி அளிக்கும் இயற்கை விவசாயி காசி ராமனுக்கு பாராட்டுக்கள்

சந்தியா திரையரங்கில் உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்ச கொடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்