in

பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

 

இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் ராம்நாட் ஓலை உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்தும் பனை தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் 20 பனை ஓலை கைவினைஞர்களுக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது.

இப்பயிற்சியினை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் ராம்நாட் பனை ஓலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் சேர்மன். கல்யாணி கார்த்திகேயன் ஆகியோர் கிராமபுற் பெண்களுக்கு வாழ்வதாரத்தை உயர்த்துவதற்கு பல நல்ல கருத்துகளை வழங்கி பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்களை பல்வேறு வண்ணங்களிலும் வடிவத்திலும் மதிப்பு கூட்டி விற்பனை செய்து வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

இந்த பயிற்சியின் மூலம் 20 பனை ஓலை கைவினைஞர்கள் பயன் பெற்றனர்.

What do you think?

மேக்கப் இல்லாமல் நடிக்க முடியாது என மதுரையில் நடந்த விழாவில் நடிகை தேவயானி பேச்சு

தொண்டி தனியார் மருத்துவமனையில் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி